பாஜக ஒரு வடநாட்டு கட்சியா? ப.சிதம்பரத்திற்கு பொன்னார் கண்டனம்
பாஜகவை வட இந்திய கட்சி என்றும், அந்த கட்சிக்கு தமிழர்கள் ஆதரவு தரக்கூடாது என்று ப.சிதம்பரம் கூறியதற்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டை ஒற்றுமைப்படுத்தி பார்க்கவேண்டிய ப.சிதம்பரம் பாஜகவை வடஇந்திய கட்சி என தெரிவித்தது தவறானது; பாஜகவின் தேசிய தலைவராக தமிழர் இருந்துள்ளார் என்பது ப.சிதம்பரத்துக்கு தெரியும்
அவரது கருத்து வேதனைக்குரியது; பாஜக பற்றி அவருக்கு ஒன்றும் தெரியவில்லை