பாஜக தேசிய தலைவரானார் நட்டா: ஹெச்.ராஜா பெயர் அறிவிப்பு எப்போது?
பாஜகவின் தேசிய தலைவராக ஜெ.பி.நட்டா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவராக ஹெச்.ராஜா அவர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது
பாஜகவின் தேசிய தலைவராக இருந்த அமித்ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதால் விரைவில் பாஜகவின் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த பதவிக்கு பலர் போட்டியில் இருந்தபோதிலும் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் ஜேபி நட்டாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் சற்றுமுன் அவர் பாஜக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜெ.பி.நட்டா தனது கல்லூரி காலங்களில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பில் பணியாற்றியவர். பின்னர் பாரதிய ஜனதாவின் இளைஞர் அணியில் சேர்ந்து படிப்படியாக பல்வேறு பதவிகளை வகித்தார். இமாச்சலப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தபோது, ஜெ.பி.நட்டா அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தேசிய தலைவர் அறிவிக்கப்பட்டதை அடுத்து விரைவில் தமிழக பாஜக தலைவராக ஹெச்.ராஜா அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது