பாஜக நிர்வாகிகளுடன் கங்குலு திடீர் மோதல்

பாஜக நிர்வாகிகளுடன் கங்குலு திடீர் மோதல்

புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் ஒருசில மாநில கிரிக்கெட் சங்கங்கள் இம்ரான்கான் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்களின் படத்தை நீக்கியுள்ள கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள கிளப் ஹவுசில் இம்ரான்கான், வாசிம் அக்ரம், ரமீஷ் ராஜா ஆகியோரது படங்களை நீக்ககோரி கொல்கத்தா பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால் இம்ரான் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்களின் படங்களை நீக்க முடியாது என்று மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலி மறுத்துள்ளார். இம்ரான்கான் உள்ளிட்டோர் படங்களை நீக்க முடியாது என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஆனால் இம்ரான்கானின் படத்தை நீக்கும் வரை எங்களது போராட்டம் நீடிக்கும் என்றும் புல்வாமா தாக்குதலை தொடர்ந்து மற்ற மாநிலங்களில் நீக்கியது போலதான் படங்களை நீக்க வேண்டும் என்று கோருகிறோம் என்றும் பாஜகவினர் வாதிட்டனர். இது தொடர்பாக கங்குலிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply