பாஜக.வுக்கு பெரிய பின்னடைவு என்பதில் மாற்றம் இல்லை: ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அளித்த பேட்டியில் மோடி ஒரு வலிமையான தலைவர் என்றும், அவர் இந்தியாவின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறார் என்றும் கூறியிருந்தார். மேலும் “10 பேர் சேர்ந்து ஒருவரை (மோடி) எதிர்த்தால் யார் பலசாலி?” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்
இந்த நிலையில் இன்று பாஜக ஐந்து மாநில தேர்தல்களில் சந்தித்துள்ள பின்னடைவு குறித்து கருத்து கூறுகையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக தனது செல்வாக்கை இழந்து இருப்பதை நன்றாக காட்டுகிறது. இது பாஜக.வுக்கு பெரிய பின்னடைவு என்பதில் மாற்றம் இல்லை’ என்று கூறியுள்ளார்.
ரஜினியை பாஜக விசுவாசி என்று கூறியவர்கள் ரஜினியின் இந்த பேட்டியை பார்த்து குழப்பம் அடைந்துள்ளனர். ரஜினிகாந்த் எப்போதும் தனது மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசி வருகிறார் என்பதையே இது காட்டுகிறது.