பாட்டு பாடிய அதிமுக எம்.எல்.ஏவை கண்டித்து உட்கார வைத்த சபாநாயகர்
தமிழக சட்டமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தின் போது கவுண்டபாளையம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி தனது கோரிக்கை குறித்து பேசினார்.
அப்போது தமிழ் மாதங்களை வரிசைப்படுத்தி அ.தி.மு.க. அரசு செய்த சாதனைகளை கிராமிய பாடல்களாக பாடினார். நீண்ட நேரம் அவர் பாடிக்கொண்டே இருந்ததால், கடுப்பான தி.மு.க. உறுப்பினர்கள் நீண்ட நேரம் அவர் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து கோரிக்கைகளை மட்டும் தெரிவிக்கும்படி சபாநாயகர் கண்டிப்புடன் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. பாடுவதை நிறுத்தி விட்டு தனது கோரிக்கைகளை தெரிவித்து விட்டு அமர்ந்தார்.