பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்த கூடாது: காவலர்களுக்கு தமிழக டிஜிபி உத்தரவு
பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த கூடாது என தமிழக டிஜிட்பி தடை விதித்து உத்தரவு பிறப்பிகத்துள்ளதால் காவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அதே நேரத்தில் காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் பாதுகாப்பின் பணியின்போது செல்போன்களை பயன்படுத்தலாம் என்றும், அந்த பதவிக்கு கீழ் உள்ள பதவியில் இருப்பவர்கள் மட்டும் பாதுகாப்பு பணியின்போது செல்போன் பயன்படுத்த கூடாது என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணியின்போது காவலர்கள் செல்போனில் வாட்ஸ் ஆப் பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
ce