பான் கார்டு-ஆதார் இணைப்பு: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு
பான் கார்டு எண் உடன் ஆதார் எண்ணை இணைக்க நாளை அதாவது செப்டம்பர் 30 கடைசி தினம் என்றும், இனிமேல் கால நீட்டிப்பு வழங்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பான்கார்டு – ஆதார் எண் இணைப்பது டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியதாவது: பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைவதாக இருந்தது.
இந்த நிலையில் பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கால கெடுவை வரும் டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே இதுவரை பான்கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்காதவர்கள் இந்த கால அவகாசத்தை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்