பாமகவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
அதிமுக கூட்டணியில் ஏழு தொகுதிகளை பெற்ற பாட்டாள் மக்கள் கட்சி நேற்று மாலை 5 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. இந்த பட்டியலில் அன்புமணி, ஏகே மூர்த்தி, வடிவேல் ராவணன், இரா.கோவிந்தசாமி, சாம் பால் ஆகியோர்கள் பெயர்கள் இருந்தன
இந்த நிலையில் பா.ம.க வேட்பாளர்கள் 2வது பட்டியல் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளராக வைத்திலிங்கம், திண்டுக்கல் தொகுதி வேட்பாளராக ஜோதிமுத்து ஆகியோர்கள் அறிவிக்கப்படுள்ளனர்.
பாமகவின் ஏழு தொகுதிகளுக்க்கும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டதால் விரைவில் அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது