பாமகவில் இருந்து அமமுகவில் இணைந்த மேலும் இருவர்!
ஏற்கனவே பாமகவில் இருந்து நடிகர் ரஞ்சித், ராஜேஸ்வரி பிரியா மற்றும் பொங்கலூர் மணிகண்டன் ஆகியோர் விலகியுள்ளனர். இதில் ரஞ்சித் மற்றும் பொங்கலூர் மணிகண்டன் ஆகிய இருவரும் தினகரனின் அமமுகவில் இணைந்தனர்
இந்த நிலையில் தற்போது பாமகவின் மாநிலத் துணைத் தலைவர் மற்றும் இரண்டு மாவட்டச் செயலாளர்கள் பாமகவிலிருந்து விலகி தினகரன் கட்சியில் இணைந்துள்ளனர். பாமகவின் மாநில துணைத் தலைவர் காங்கயம் கி.மாதவன், மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இரா.கணேஷ், கொங்கு கிஷோர் ஆகியோர் நேற்று சூலூரில் பிரச்சாரத்துக்கு வந்த தினகரன் முன் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
பாமகவின் கூடாரம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகி அமமுகவில் இணைந்து வருவதால் பாமக தரப்பு அதிர்ச்சியில் உள்ளது