பாமக எம்.எல்.ஏ காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார்
பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரும் எம்.எல்.ஏவுமான காடுவெட்டி குரு கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 57
நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு மேல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில்ல் சிகிச்சை பெற்று வந்த காடுவெட்டி குருவை பாமக தலைவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அவ்வப்போது நேரில் சென்று அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் அறிந்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரு நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து, அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இவரது மறைவுக்கு பாமக தலைவர் ராமதாஸ், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாமக சார்பில் ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.