பாம்பும், முதலையும் உங்களுக்கு விருந்து வைப்பார்கள்: மோடியை மிரட்டிய பாடகி மீது வழக்குப்பதிவு
பாம்பும் முதலைகளும் உங்களுக்கு விருந்து வைப்பார்கள் என பாம்பு, முதலைகளை கையில் வைத்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டு வமையில் பாட்டு பாடிய பிரபல பாகிஸ்தான் பாப் பாடகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரை பூர்வீகமாக கொண்டு பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் பாடகி ரபி பிர்ஸாடா. இவர் தனது ட்விட்டரில் ஒரு பாடலை பதிவு செய்தார். அதில் கையில் விஷ பாம்புகளை வைத்து கொண்டு, தரையில் சில முதலைகளை வைத்து கொண்டு, ‘நான் காஷ்மீரி பெண். இந்த பரிசு உண்மையில், மோடிக்காக. நீங்கள் காஷ்மீர் மக்களை துன்புறுத்துகிறீர்கள். அதனால் உங்களுக்காக இவற்றை தயார் செய்துள்ளேன். நீங்கள், நரகத்தில் இறக்க தயாராக இருங்கள், சரியா? எனது இந்த நண்பர்கள் உங்களுக்கு விருந்து வைப்பார்கள்’ என்ற பாடலையும் பாடுகிறார்
இதனையடுத்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு, சட்டவிரோதமாக விலங்குகளை வீட்டில் வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 2 வருடம் வரை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.