பாரதியார் பல்கலையில் எம்.சி.ஏ. படிப்பு: ஆகஸ்ட் 16-ல் ஆன்லைன் நுழைவுத் தேர்வு

பாரதியார் பல்கலையில் எம்.சி.ஏ. படிப்பு: ஆகஸ்ட் 16-ல் ஆன்லைன் நுழைவுத் தேர்வு

bharathiar univபாரதியார் பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ. படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக ஆகஸ்ட் 16-ஆம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் 3 ஆண்டு எம்.சி.ஏ. படிப்பில் ஆண்டுக்கு 80 மாணவர்கள் வீதம் சேர்க்கப்படுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) மூலமாக 6 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 74 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இந்நிலையில், அந்தக் காலியிடங்கள் நுழைவுத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்படும் என்று பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, டான்செட் நுழைவுத் தேர்வு எழுதாத மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் 16-ஆம் தேதி நடைபெறும் ஆன்லைன் நுழைவுத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

தகுதியுள்ள பட்டதாரி மாணவர்கள், அன்று காலை 11 மணிக்கு பல்கலைக்கழகத்துக்கு வந்து தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொண்டு தேர்வு எழுதலாம். மேலும், இது தொடர்பான விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட துறைப் பேராசிரியர்களை 0422-2428356, 97900 04351 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply