பாரத் பல்கலைக்கழகத்தில் 3 சட்டப் படிப்புகள் தொடக்கம்

பாரத் பல்கலைக்கழகத்தில் 3 சட்டப் படிப்புகள் தொடக்கம்

bharath univகிழக்கு தாம்பரம் சேலையூரில் அமைந்துள்ள பாரத் பல்கலைக்கழகத்தில் புதிதாக 3 சட்ட பட்டப் படிப்புகள் தொடக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து பாரத் பல்கலைக்கழக சட்டப் பட்டப் படிப்புகளுக்கான முதல்வர் கஜேந்திரராஜ் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:-

பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பக் கல்வி வழங்கி வரும் பாரத் பல்கலைக்கழகத்தில் நடப்பு ஆண்டில் பி.பி.ஏ. எல்.எல்.பி. (ஹானர்ஸ்), பி.காம். எல்.எல்.பி. (ஹானர்ஸ்) ஆகிய இரு 5 ஆண்டு சட்டப்படிப்புகளும், எல்எல்.பி.(ஹானர்ஸ்) 3 ஆண்டு சட்டப் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

5 ஆண்டு சட்டப் பட்டப் படிப்புகளுக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் எந்தப் பாடத்தை தேர்ச்சி பெற்றிருந்தாலும் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

3 ஆண்டு எல்.எல்..பி. (ஹானர்ஸ்) படிப்புக்கு பி.ஏ., பி.எஸ்.சி. ,பி.காம்., பி.பார்ம்., பி.இ.,பி.டெக்.,ஆகிய பட்டப் படிப்பிலும் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

விவரங்களுக்கு 9444077761, 9884600394 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம் என்றார்.

Leave a Reply