பாரளுமன்ற தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணியா?
கடந்த சில வருடங்களாகவே திமுகவும், பாமகவும் எலியும் பூனையுமாக அரசியல் செய்து கொண்டிருக்கையில் வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து திமுகவுடன் பாமக நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வதை போல் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகிய இருவரும் சமீபத்தில் சென்னையில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சியை பயமுறுத்த மூன்றாவது அணிக்கு ஆதரவு தருவது போல் திமுக நடந்து கொண்டாலும், திமுக வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தான் கூட்டணி சேரும் என்று கூறப்படுகிறது. இந்த கூட்டணியில் பாமக இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதுகுறித்து சமீபத்தில் தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும் அன்புமணியும் சந்தித்துப் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் சட்டமன்ற தேர்தலில் பாமக மீண்டும் தனித்து போட்டியிடவே விரும்புவதாக தெரிகிறது. இருப்பினும் தேர்தல் அறிவித்த பின்னர் தான் எந்த கட்சி எந்த கூட்டணியில் இருக்கும் என்பதை உறுதியாக சொல்ல முடியும்