பாலகிருஷ்ண ரெட்டி தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
இருபது ஆண்டுகளுக்கு முன் பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்தியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை சிறப்பு நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, அவரின் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. பதவி பறிபோனது.
இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனை நிறுத்தி வைக்குமாறு பாலகிருஷ்ண ரெட்டி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது
மேலும் நான்கு 4 வார காலத்திற்குள் தமிழக அரசு இதுகுறித்து பதில்மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது