பாலின சமத்துவத்துக்காகக் குரல் கொடுக்கும் ஆஸ்கர் நடிகை

பாலின சமத்துவத்துக்காகக் குரல் கொடுக்கும் ஆஸ்கர் நடிகை

16ஹாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகையான இயான் ஹேத்வே, பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் தன்னிறைவுக்கான நல்லெண்ணத் தூதுவராக ஐக்கிய நாடுகள் சபையால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்கர் விருதுபெற்ற இயான் ஹாத்வேயின் நியமனம், பணியிடச் சூழலில் பெண்கள் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் பணியாற்றும் வகையில் சூழலை மேம்படுத்துவதற்கான விழிப்புணர்வுக்கு மிகவும் உதவும் என்று ஐக்கிய நாடுகள் மகளிர் அமைப்பின் செயல் இயக்குநர் கூறியுள்ளார்.

பணியிடங்களைப் பெண்களுக்கு உகந்ததாக மேம்படுத்துவதன் மூலம் பணியிடங்களில் சமத்துவத்தை ஏற்படுத்த முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காகத் தனக்கு அளிக்கப்பட்ட கவுரவம் என்று இந்த நியமனத்தை வரவேற்றுள்ளார் இயான் ஹாத்வே.

பெண் குழந்தைகளின் கல்வியை வலியுறுத்தும் சி.என்.என். தொலைக்காட்சி ஆவணப்படமான ‘கேர்ள் ரைசிங்’ படத்துக்கு இயான் ஹாத்வே பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

Leave a Reply