பாலியல் வன்கொடுமை விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ மீது சிபிஐ வழக்கு

பாலியல் வன்கொடுமை விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட பாஜக எம்.எல்.ஏ மீது சிபிஐ வழக்கு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உன்னாவ் என்ற பகுதியின் எம்.எல்.ஏ குல்தீப் சிங் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரை பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் சஸ்பெண்ட் செய்தது. இந்த நிலையில் குல்தீப் சிங் எம்எல்ஏ மீது தற்போது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது

எம்எல்ஏ குல்தீப் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேருக்கும் மேற்பட்டோர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் பதியப்பட்ட நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது இதனால் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply