பொதுமக்கள் தங்களுக்கு தங்கு தடையின்றி பால் வினியோகம் மற்றும் பால் கொள்முதல் தொடர்பான தகவல்களுக்கு ஆவின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி வடமண்டலத்திற்கு உதவி பொதுமேலாளர் (விற்பனை) பிரவீனா செல்போன் எண் 96008 06211 அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4253 300 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
அதேபோல் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களை சேர்ந்த விற்பனை பிரிவு மற்றும் கொள்முதல் பிரிவு அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்
இவ்வாறு தமிழக அரசு பிறப்பித்துள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.