பிஎஸ்என்எல் பிளான் – 97 திட்டம் அறிமுகம்

பிஎஸ்என்எல் பிளான் – 97 திட்டம் அறிமுகம்

பிஎஸ்என்எல் சிம்முடன் இணைந்த மைக்ரோமேக்ஸ் செல்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, பிளான்-97 என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாதம் ரூ.97 கட்டணத்தில் அளவில்லா இலவச அழைப்புகளை மேற்கொள்வதோடு, 5 ஜிபி வரை டேட்டாவும் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனம், மைக்ரோமேக்ஸ் இணைந்து ‘பாரத்1’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ரூ.2,200 கட்டணம் செலுத்தினால் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் செல்போன் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிம்கார்டு வழங்கப்படும். இந்த செல்போன் இணைப்பை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிளான் – 97 என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மாதம் ரூ.97-க்கு ரீசார்ஜ் செய்தால் அனைத்து நெட்வொரக் செல்போனுக்கும் அளவில்லா அழைப்புகளை மேற்கொள்ளலாம். அத்துடன், வேகக் கட்டுப்பாடின்றி 5 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் என பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply