பிகில்’ படத்திற்கு இத்தனை இடைஞ்சல்களா? சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

பிகில்’ படத்திற்கு இத்தனை இடைஞ்சல்களா? சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

விஜய் நடித்த பிகில் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கான முதல் மூன்று நாட்கள் டிக்கெட்டுக்களின் முன்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது

இதனையடுத்து இந்த படத்தின் மீதான வழக்குகள் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் உயிர்ப்பெறும் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய போலீஸ் புகார் இந்த படத்திற்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளது

அதாவது பிகில் அதிகாலை காட்சியை தடை செய்ய கோரியும், நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் அதிக பணம் வசூலித்தால் திரையரங்கத்தின் உரிமையை ரத்து செய்யக் கோரியும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தேவராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply