’பிகில்’ படத்தை கவிழ்க்க இப்படியும் ஒரு திட்டமா? நெட்டிசன்கள் கேள்வி
நடிகர் விஜய்யின் சமீபத்திய திரைப்படங்கள் ரிலீசுக்கு முன்னரும் ரிலீசுக்கு பின்னரும் பிரச்சனைகளை சந்தித்து வருவது தெரிந்ததே.
உதாரணமாக மெர்சல் திரைப்படம் ரிலீஸ் ஆன பின்னர் பாஜகவினர் அந்த படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல் சர்க்கார் படத்திற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு வகையில் இந்த எதிர்ப்பு காரணமாக இந்த இரண்டு படங்களும் நல்ல ஹிட்டாகி வசூலை அள்ளியது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கும் பிகில் திரைப்படத்திற்கு பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் தனது டுவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: விஜய் வீபூதி பூசி நடிக்கும் போது பிடிக்கும் நமக்கு அவர் சிலுவை அணியும் போது பிடிக்காதது சரியல்ல. அவர் எங்காவது பொது வெளியில் தன் மதத்தை மட்டும் உயர்வாக பேசி மற்ற மதத்தை தாழ்வாக பேசி பார்த்துள்ளீரா.
இதனையடுத்து டுவிட்டர் பயனாளிகள் தெரிவித்து வரும் கருத்து என்னவெனில் விஜய்யின் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த படத்தை ஹிட்டாக்குவதை விட, ஆதரவு கொடுத்து தோல்வி அடைய வைக்கலாம் என்பது தான் உங்கள் திட்டமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்
இருப்பினும் ஒரு சிலர் எஸ்வி சேகரின் இந்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது