‘பிகில்’ வசூல் ரூ.300 கோடியா? அளந்துவிடும் டிராக்கர்கள்

‘பிகில்’ வசூல் ரூ.300 கோடியா? அளந்துவிடும் டிராக்கர்கள்

தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாகி, முதல் நான்கு நாட்கள் மிகப்பெரிய வசூலை பெற்றது. ஆனால் அதனை அடுத்து ஐந்தாவது நாளில் இருந்தே கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம் பிக்கப் ஆகிவிட்டதால் ‘பிகில்’ படத்திற்கான வசூல் சரிய தொடங்கியது. இருப்பினும் ‘பிகில்’ படம் ரூ 200 கோடி வசூலை நெருங்கி இருக்கலாம் என்று நடுநிலை டிரேடிங் வட்டாரங்கள் கூறுகின்றன

ஆனால் பெய்டு டிராக்கர்கள் இந்த படம் கடந்த வாரமே ரூ.250 கோடி வசூலைத் தாண்டியுள்ளதாகவும், இன்று இந்த படம் 300 கோடி கிளப்பில் சேர்ந்துவிட்டதாகவும் கூறி வருகின்றனர். எந்தவிதமான அடிப்படை ஆதாரம் இன்றி ரூ.300 கோடி ரூ.400 கோடி என்று இவர்கள் செய்திகளை வெளியிடுவதால் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் தங்களுடைய சம்பளத்தை ஏற்றி அடுத்த பட தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடியை கொடுக்கின்றார்கள்

‘பிகில்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் இந்த படத்தை அவுட்ரெட் முறையில் தமிழகத்தில் விற்பனை செய்துள்ளதால் இந்த படத்தின் உண்மையான வசூல் யாருக்கும் தெரியாது. அவ்வாறு இருக்க, பெய்டு மூவி டிராக்கர்கள் இவ்வாறு கதை அளந்து வருவதை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர்

Leave a Reply