பிக்சட் பிராட் பேண்ட் வேகத்தில் இந்தியாவுக்கு 67வது இடம்: ஆய்வில் தகவல்
பிப்ரவரி மாதத்தில் பிக்சட் பிராட் பேண்ட் வேகத்தில் இந்தியா 67வது இடமும் மொபைல் இண்டெர்நெட் வேகத்தில் 109-வது இடத்திலும் உள்ளது என்று இணையதள டெஸ்ட்டிங் மற்றும் ஆய்வு நிறுவனம் ஊக்லா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஊக்லாவின் புதுப்பிக்கப்பட்ட வேகச்சோதனை உலகக் குறியீடு கூறுவது என்னவெஹில் இந்தியாவின் பிக்சட் பிராட் பேண்ட் டவுன்லோட் வேகம் நவம்பர் 2017-ல் வினாடிக்கு 18.82 மெகாபைட்டுகளாக இருந்தது பிப்ரவரி 2018-ல் வினாடிக்கு 20.72 மெகாபைட்டுகளாக முன்னேறியுள்ளது.
பிக்சட் பிராட் பேண்ட் ஸ்பீடில் இந்தியா கடந்த ஆண்டு 76-ம் இடத்தில் இருந்தது தற்போது 67வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
ஆனால் மொபைல் இண்டெர்னெட் டவுன்லோடு வேகத்தில் மாற்றமில்லை எனவே 109-வது இடத்தில் உள்ளது.
பிப்ரவரி மாத மொபைல் இண்டெர்னெட் வேகத்தில் நார்வே முதலிடம் வகிக்கிறது. பிக்சட் பிராட்பேண்ட் வேகத்தில் சிங்கப்பூர் விநாடிக்கு 161.53 மெகாபைட்டுகளுடன் முதலிடம் வகிக்கிறது.
ஸ்பீட் டெஸ்ட் குளோபல் இண்டெக்ஸ் உலகம் முழுதும் இண்டெர்நெட் வேகத்தரவுகளை மாதாந்திர அடிப்படையில் ஒப்பிடுகிறது. மொத்தம் உலக ளவில் 7,021 சர்வர்கள் உள்ளன, இதில் 439 அதிவேக சர்வர்கள் இந்தியாவில் உள்ளன என்று ஊக்லா தெரிவித்துள்ளது.