பிக்பாஸ் ஆரவ் படத்தில் இணைந்த ஆரவ்

பிக்பாஸ் ஆரவ் படத்தில் இணைந்த ஆரவ்

பிக்பாஸ் புகழ் ஆரவ் ஏற்கனவே ராஜபீமா என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் தற்போது ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சரண் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே அஜித் நடித்த காதல் மன்னன், அட்டகாசம், அமர்க்களம், அசல் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை ராதிகா முக்கிய கேரக்டரில் நடிக்க படக்குழுவினர்களுடன் இணைந்துள்ளர். இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆரவ், காவ்யா தாப்பர், நாசர், யோகி பாபு, ‘பாகுபலி’ காலகேயன் புகழ் பிரபாகர் போன்றோர் நடித்து வரும் இந்த படத்திற்கு குகன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது

Leave a Reply