‘பிக்பாஸ்’ ரைசாவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு !
பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கடந்த சில வருடங்களாக சில படங்களை தயாரித்தும் வருகிறார். அவர் தயாரிப்பில் வெளியான ‘ப்யார் பிரேம காதல்’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் தயாரித்து வருகின்ற மற்றொரு படத்தின் தலைப்பு இணையத்தளத்தில் வெளியானது.
‘ஆலிஸ்’ என்ற தலைப்பு கொண்ட இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை யுவன் ஷங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதில் மகிச்சியடைகிறேன் என்று யுவன் கூறியுள்ளார்.
மேலும் இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான ‘ரைசா’ இப்படத்தில் நடித்து வருகிறார். யுவன் இயக்கிய ப்யார் ‘பிரேம காதல் படத்திலும்’ ரைசா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
#ALICE pic.twitter.com/oasLdSBwQL
— Raja yuvan (@thisisysr) January 14, 2019