பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சேரன்: சீக்ரெட் அறையில் அடைப்பு

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சேரன்: சீக்ரெட் அறையில் அடைப்பு

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் கவின், முகின், லாஸ்லியா, சேரன் மற்றும் ஷெரின் ஆகிய ஐவரில் சேரனுக்கு குறைவான வாக்குகள் கிடைத்திருந்ததால் அவர் இன்று வெளியேற்றப்பட்டார்.

இருப்பினும் அவருக்கு சீக்ரெட் அறை கொடுக்கப்பட்டதால் அவர் இன்னும் போட்டியில் இருந்து வெளியேறவில்லை.

சேரன் தங்க வைக்கப்படும் சீக்ரெட் அறையில் சிகப்பு, புளூ, பச்சை லைட்டுக்கள் இருக்கின்றன. அவருக்கு ஒரு ஹெட்போன் கொடுக்கப்படுகிறது. அதனை வைத்து அவர் பிக்பாஸ் வீட்டில் நடப்பதை கவனித்து வருகிறார்.

இதற்கு முன்னர் முதல் சீசனில் சுஜா வருணியும், இரண்டாவது சீசனில் வைஷ்ணவியும் சீக்ரெட் அறையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply