பிக்பாஸ் 3: முதலில் வந்தவர் முதலில் வெளியேறினார்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் நபர் வெளியேறும் படலம் நடந்தபோது வெளியேற்றப்படும் நபர் பாத்திமா பாபு என அறிவிக்கப்பட்டது. பாத்திமா பாபுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக உள்ளே வந்தார். அவரே முதலில் வெளியேறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
ஏழு பேர் எவிக்சன் பட்டியலில் இருந்தாலும் சனிக்கிழமையே மதுமிதா காப்பாற்றப்பட்டார். அதன்பின் மீரா, சரவணன், சாக்சி, கவின் சேரன் ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தபின்னர் பாத்திமா பாபு வெளியேறும் நபர் என அறிவிக்கப்பட்டார். பாத்திமா பாபு வெளியேறியதில் தர்ஷன், மோகன் வைத்யா ஆகியோர் பெரும் வருத்தமடைந்தனர்,