பிச்சைக்காரர்களுக்கு ஓட்டலில் அறுசுவை உணவு வாங்கி கொடுத்த மனிதர்!
பிச்சைக்காரர்களுக்கு ஓட்டலில் அறுசுவை உணவு வாங்கி கொடுத்த மனிதர்!மேலே உள்ள படத்தில் இருப்பவர்கள் ஒரு ஓட்டலின் முன்பு நீண்ட நாட்களாக பிச்சை எடுத்து வருகின்றனர். இந்த ஓட்டலுக்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் இவர்களுக்கு அவ்வப்போது பிச்சை போடுவதுண்டு
இந்த நிலையில் இந்த ஓட்டலுக்கு வந்த ஒருவர் இருவரையும் ஓட்டல் உள்ளே அழைத்து சென்று அறுசுவை உணவை வாங்கி கொடுத்தார். ருசியான உணவுகளை வயிறார உண்ட இவர்கள் இருவரும் அந்த நபரை வாழ்த்தினர். எவ்வளவு கேட்டுக்கொண்டு அவர் தனது புகைப்படத்தை பதிவு செய்ய மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனிதருக்கு ஒரு வாழ்த்து தெரிவிக்கலாமே!