பித்ருக்களை 15 நாட்கள் வழிபட வேண்டும் என்று கூறுவது ஏன்?
மகாளய பட்சத்தின் 15 நாட்களும் பித்ருக்கள் நம்மோடு இருப்பதால், அந்த 15 நாட்களும் தவறாமல் வழிபட வேண்டும். 15 நாட்களில் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டு இருக்கிறது.
மகாளய பட்சம் என்பது 15 நாட்களை குறித்தாலும் சில ஆண்டுகளில் திதிகள் தொடங்கும் நேரத்தைப் பொருத்து 14 நாட்களாகி விடுவதுண்டு. இந்த ஆண்டு (2017) மகாளய பட்சம் 14 நாட்களே வருகிறது.
இதன் காரணமாக 15 நாட்களுக்கு பதில் 14 நாட்களே நாம் தர்ப்பணம் செய்ய வேண்டியதுள்ளது. அதாவது ஏதாவது ஒரு நாளில் இரண்டு திதிக்களுக்குரிய தர்ப்பணம் வந்து விடும்.
அந்த வகையில் 6-ந் தேதி பிரதமை திதி, 7-ந் தேதி துவிதியை, 8-ந் தேதி திருதியை, 9-ந் தேதி சதுர்த்தி, 10-ந் தேதி பஞ்சமி, 11-ந் தேதி சஷ்டி, 12-ந் தேதி சப்தமி, 13-ந் தேதி அஷ்டமி, 14-ந் தேதி நவமி, 15-ந் தேதி தசமி, 16-ந் தேதி ஏகாதசி, 17-ந் தேதி துவாதசி, 17-ந் தேதி திரயோதசி, 18-ந் தேதி சதுர்த்தசி, 19-ந் தேதி-மகாளய அமாவாசை என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 17-ந் தேதி துவாதசி, திரயோதசி திதிகளுக்குரிய தர்ப்பணம் கொடுக்கப்பட வேண்டும். அன்றைய தினம் இரு திதிக்களுக்குரிய தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பதில்லை. ஏதாவது ஒரு திதியை நினைத்துக்கொண்டு தர்ப்பணம் செய்தாலே போதுமானது.
இப்படி செய்வதால் அன்றைய தினங்களுக்குரிய திதிக்கு ஏற்ப நிச்சயம் பலன்கள் கிடைக்கும்.
மகாளய பட்சத்தின் 15 நாட்களும் பித்ருக்கள் நம்மோடு இருப்பதால், அந்த 15 நாட்களும் தவறாமல் வழிபட வேண்டும். 15 நாட்களில் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டு இருக்கிறது.
பிரதமை: செல்வ வளர்ச்சி.
துவிதியை: வம்சம் விருத்தியடைதல்.
திருதியை: நல்ல மணவாழ்வு அமைதல்.
சதுர்த்தி: பகை விலகும்.
பஞ்சமி: விரும்பிய பொருள் சேரும்
சஷ்டி: நன்மதிப்பைப் பெற்றுத் தரும்.
சப்தமி: மேலுலகோர் ஆசி.
அஷ்டமி: அறிவு வளர்ச்சி.
நவமி: ஏழு பிறவிக்கும் நல்ல மனைவி, குடும்பம் அமைதல்.
தசமி: விருப்பங்கள் நிறைவேறும்.
ஏகாதசி: கல்வி அபிவிருத்தி.
துவாதசி: ஆபரணங்கள் விருத்தியாதல்.
திரயோதசி: நல்ல குழந்தைகள், நீண்ட ஆயுள் கிடைக்கும். பசுக்கள் விருத்தியாகும்.
சதுர்த்தசி: கணவன் ,மனைவியருக்குள் சச்சரவு நீங்கி ஒற்றுமை வளர்தல்.
அமாவாசை: மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் பரிபூரண அருள் கிடைக்கும்.