பினாமிகள் போல மாவட்ட செயலாளர்கள் செயல்படுகிறார்கள்: திமுக குறித்து மு.க.அழகிரி
கருணாநிதியின் மறைவிற்கு பின் திமுகவில் மீண்டும் இணைய பெரும் முயற்சி எடுத்த மு.க.அழகிரி, அந்த திட்டம் நிறைவேறாததால் தற்போது அமைதி காத்து வருகிறார். வரும் மக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்பதை கூட அவர் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மு.க.அழகிரி பேசியதாவது; திமுகவில் மாவட்ட செயலாளர்கள் எல்லாம், ஏதோ சம்பளம் வாங்கும் பணியாளர்கள் போன்று செயல்படுவார்கள். தற்போது மாவட்ட செயலாளர்கள் பினாமிகள் போல செயல்படுகிறார்கள். அப்படிப்பட்ட நிலைமை எல்லாம் மாற வேண்டும்.
கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மதிப்பு இல்லை. உண்மையாக உழைத்தவர்கள் ஓரங்கட்டப்பட்டுள்ளனர். இப்போது எதுவும் செய்யாதவர்கள் பதவியைப் பெற்று இருக்கிறார்கள். விரைவில் அந்த மோசமான சூழ்நிலை மாறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’ என்று பேசினார்.