பிரசவ விடுமுறைக்கு செல்கிறார் ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க்
அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் சமூக வலைத்தளங்களின் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் பேஸ்புக், தனது ஊழியர்களுக்கு பிரசவ கால விடுமுறையாக நான்கு மாதங்கள் அளித்துள்ளது. இந்த விடுமுறையை குழந்தை பிறக்கும் முன்போ அல்லது குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள்ளோ எடுத்து கொள்ளலாம்.
ஊழியர்களுக்கு பிரசவ விடுமுறையை அறிவித்த ஃபேஸ்புக்கின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் சக்கர்பெர்க் தற்போது தனக்கே குழந்தை பிறக்கப்போவதையொட்டி இரண்டு மாதம் விடுமுறை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். இது ஒரு தனிப்பட்ட முடிவு என்று அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கப்போவதாக கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது அவர் விடுமுறை எடுத்துள்ளார். ஆனாலும் தான் விடுமுறையில் இருக்கும் காலத்தில் தனது பணிகளை யார் கவனிக்கப் போவது என்பது குறித்து மார்க் எதுவும் தெரிவிக்கவில்லை.
English Summary: Facebook CEO Zuckerberg to take two months of paternity leave