பிரச்சனை நடந்த பிறகு எழும் கோவத்தால் எந்த மாற்றமும் நிகழப் போவது இல்லை: பா.ரஞ்சித்

பிரச்சனை நடந்த பிறகு எழும் கோவத்தால் எந்த மாற்றமும் நிகழப் போவது இல்லை: பா.ரஞ்சித்

பொள்ளாச்சியில் மாணவிகளிடம் நட்பாக பழகி வீடியோ எடுத்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருநாவுக்கரசு என்ற இளைஞர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒட்டு மொத்த தமிழகத்தையும் கொந்தளிக்க செய்துள்ள நிலையில் இதுகுறித்து அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் தங்களுடைய ஆவேச கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘காலா’, ‘கபாலி’ உள்பட ஒருசில படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் இதுகுறித்து கூறியதாவது:

இதுகுறித்து அவர், ‘பொள்ளாச்சி போன்ற சம்பவங்கள் நடக்கும் போதும், பெண்களை எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் நம் அனைவருக்கும்… பிரச்சனை நடந்த பிறகு எழும் கோவத்தால் எந்த மாற்றமும் நிகழப் போவது இல்லை. ஆண் மைய சமூகத்தில் பெண்கள் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய முன்வர வேண்டும். இல்லையேல், பாதிக்கப்பட்ட பெண்ணின் அல்லது பாதிக்கப்பட போகும் பெண்ணின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும், அதிகாரம் விழுங்கிக் கொண்டே தான் இருக்கும்’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply