பிரச்சார தடை செய்ததன் பின்னனி இதுதான்: மாயாவதி
மேற்குவங்கத்தில் அமித்ஷா பேரணியின்போது வன்முறை ஏற்பட்டதை அடுத்து இன்று காலை 10 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கு மம்தா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து கூறிய மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளர் என்று கூறப்படும் மாயாவதி கூறியபோது, ‘மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு எதிராக பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித்ஷாவும் செயல்படுவது இதன்மூலம் தெளிவாகிறது. இன்று மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியின் பிரச்சாரம் முடிந்தவுடன் நாளை பிரச்சாரத்தை தடை செய்திருப்பது பாரபட்சமானதாகும் என்று மாயாவதி தெரிவித்துள்ளர்.