பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது:மு.க.ஸ்டாலின் பாராட்டு
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கு பாரத ரத்னா விருதினை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘நாட்டின் கட்டமைப்பிலும், அரசியலிலும் பிரணாப் முகர்ஜியின் பங்களிப்பு அளிப்பரியது என்றும், பாரத ரத்னா பெற்றுள்ள அவருக்கு தனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரணாப் முகர்ஜி மட்டுமின்றி மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரும், பாரதிய ஜனதா கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான மறைந்த நானாஜி தேஷ்முக், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளருமான மறைந்த பூபேன் அசாரிகா ஆகியோர்களும் பாரத ரத்னா விருதை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Warmest congratulations to Thiru Pranab Mukherjee @CitiznMukherjee on being conferred the #BharatRatna, an honour he richly deserves.
His contribution to nation building and Indian political discourse is immeasurable. pic.twitter.com/M7JsBdIJVr
— M.K.Stalin (@mkstalin) January 25, 2019