பிரதமரிடம் கோரிக்கை விடுத்த 6 வயது சிறுமி: அதிரடி நடவடிக்கை எடுத்த கவர்னர்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி தினமும் தங்களுக்கு 4 மணி நேரம் ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுவதால் பாடச் சுமை அதிகமாக இருப்பதாகவும் இந்த வயதில் எவ்வாறு தங்களால் இவ்வளவு பாடங்களை படிக்க முடியும் என்றும் பிரதமர் மோடிக்கு வீடியோ ஒன்றின் மூலம் கேள்வி எழுப்பி இருந்தார்

இந்த வீடியோ இந்தியா முழுவதும் வைரல் ஆன நிலையில் தற்போது கஷ்மிர் கவர்னர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்

இதனையடுத்து தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஒரு மணி அரை மணி நேரம் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் எடுத்தால் போதும் என்று அறிவித்துள்ளார்

அதேபோல் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஒன்றரை மணி நேரமும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3 மணி நேரம் மட்டுமே ஆன்லைன் வகுப்புகள் எடுக்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்