பிரதமரின் உரையை தவறாக மொழி பெயர்த்தாரா எச்.ராஜா?

பிரதமரின் உரையை தவறாக மொழி பெயர்த்தாரா எச்.ராஜா?

மதுரையில் சமீபத்தில் நடந்த எய்ம்ஸ் மருத்துவமனை தொடக்கவிழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் ஆங்கில உரையை தமிழில் தவறாக எச்.ராஜா மொழி பெயர்த்துவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி வேகமாக பரவி வருகிறது.

பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தையும், பாம்பனையும், தனுஷ்கோடியையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுளோம். அதற்காக ரூ. 2,100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ஆனால் எச்.ராஜா தமிழில் மொழிப்பெயர்த்த போது, மோடி 2100 கோடி ரூபாய் என்று கூறியதை 21,000 கோடி என்று தவறாக மொழி பெயர்த்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹெச். ராஜாவின் மொழிப்பெயர்ப்பை நெட்டிசன்கள் சிலர் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். இதேபோல் கடந்தா 2017ம் ஆண்டு அமித்ஷாவின் உரையை ஹெச்.ராஜா அப்போது மொழிப்பெயர்த்தபோது சொட்டுநீர் பாசனம் என்று கூறியதை சிறுநீர் பாசனம் என்று தமிழில் மொழிப்பெயர்த்து சர்ச்சையில் சிக்கினார் எச்.ராஜா என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply