பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டுவதை முழுநேர தொழிலாக மாற்றிய வைகோ!
பிரதமர் மோடி தமிழகம் வருகை தரும் போதெல்லாம் கருப்புக்கொடி காட்டி தனது எதிர்ப்பை தெரிவித்து வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘பிப்ரவரி 10, 19 ஆகிய இரண்டு நாட்களில் தமிழகத்துக்கு வரும் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றபின் ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், மோடி அரசின் செயல்பாடுகளால் தமிழகம் எல்லா வகையிலும் வஞ்சிக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்துக்குப் பிரதமர் வரும்போது கருப்புக்கொடி காட்டுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 10ஆம் நாள் திருப்பூருக்கும், 19ஆம் நாள் கன்னியாகுமரிக்கும் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கருப்புக் கொடி காட்டும் போராட்டம் தனது தலைமையில் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். மக்களின் பிரச்சனைகளுக்கு போராடாமல் பிரதமருக்கு கருப்புக்கொடி கட்டுவதையே முழுநேர தொழிலாக மாற்றுவதால் எல்லாம் மாறிவிடுமா? என்று வைகோவுக்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.