பிரதமர், அதிபர் உள்பட யாரும் முதல்வகுப்பு விமானப்பயணம் செய்ய கூடாது: இம்ரான்கான் உத்தரவு
பாகிஸ்தானின் புதிய பிரதமராக சமீபத்தில் பதவியேற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், நாட்டின் அதிபர், பிரதமர், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், உள்பட யாரும் அரசு கஜானாவிலிருந்து செலவழித்து விமான முதல் வகுப்பில் பிரயாணம் செய்யக் கூடாது என்று அதிரடி உத்தரவு ஒன்றை அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தற்போது கடும் நிதிச்சிக்கலில் தத்தளித்து வருவதால் செலவுகளைக் குறைக்க இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்று பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேபோல் தனக்கு இரண்டே இரண்டு சேவகர்கள் போதும் என்றும் 2 வாகனங்கள் போதும் என்றும் கட்டுப்பாடு வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள இம்ரான்கன், அரசு அலுவலக நேரம் காலை 9 மணியிலிருந்து 5 மணி வரை என்பதை 8 மணியிலிருந்து 4 மணி வரை என்பதாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.