கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பிரதமர் அலுவலகத்தில் சைக்கோ அதிகாரிகள் தேவையில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில மாதங்களாகவே பாஜகவில் இருக்கும் சுப்பிரமணியசாமி அக்கட்சியினர்களை எதிர்த்தே விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நமக்கு கொரோனாவை கட்டுப்படுத்த தோல்வியடைந்த பிரதமரின் சைக்கோ அதிகாரிகள் தேவையில்லை என்றும் அவர்களுக்கு பதிலாக கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு குழுவை தேவை என்றும் சுப்பிரமணியசாமி குறிப்பிட்டுள்ளார்
அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஆக்சிஜன் இல்லை, மருந்து இல்லை தடுப்பூசி இல்லை என்ற குற்றச்சாட்டுகள் வரும் நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது