பிரதமர் சந்திப்புக்கு பின்னர் தொண்டர்களை பார்த்து கையசைத்த கருணாநிதி

பிரதமர் சந்திப்புக்கு பின்னர் தொண்டர்களை பார்த்து கையசைத்த கருணாநிதி

திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு சற்றுமுன் வந்த பிரதமர் மோடி அவரிடம் நலம் விசாரித்துவிட்டு சென்றார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாயந்த்தாக கருதப்படும் நிலையில் இந்த சந்திப்பு குறித்து கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்பியுமான கனிமொழி கூறியபோது, ‘இந்த சந்திப்பு மரியாத நிமித்த சந்திப்பு மட்டுமே. இதில் அரசியல் எதுவும் இல்லை என்று கூறினார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை இந்த சந்திப்பு குறித்து கூறியபோது, ‘கருணாநிதி டெல்லிக்கு வந்து தனது வீட்டில் ஓய்வு எடுக்க பிரதமர் அழைப்பு விடுத்ததாகவும், இந்த சந்திப்பை அரசியல் நோக்கத்துடன் யாரும் பார்க்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி சென்னைக்கு பலமுறை வருகை தந்தபோதும் கருணாநிதியை சந்திக்காத நிலையில் பிரதமர் மோடியின் இந்த வருகை நிச்சயம் அரசியல் அரங்கில் நடைபெறவுள்ள பெரிய திருப்பத்தை காட்டுவதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

இந்த நிலையில் பிரதமர் சந்திப்புக்கு பின்னர் கோபாலபுரம் வீட்டில் இருந்து வெளியே வந்த கருணாநிதி, தொண்டர்களை பார்த்து கையசைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply