பிரதமர் படத்தை வைக்க கட்டாயப்படுத்தப்படுகிறதா? பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கலக்கம்

பிரதமர் படத்தை வைக்க கட்டாயப்படுத்தப்படுகிறதா? பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் கலக்கம்

நாடு முழுவதிலும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பிரதமர் மோடியின் படத்தைக் கட்டாயம் வைக்க வேண்டும் என்று பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு எல்பிஜி இணைப்பு வழங்கும் திட்டத்தை குறிப்பிட்டு பிரதமரின் புகைப்படத்துடன் கூடிய ஒரு படம் வைக்க வேண்டும் என்ற உத்தரவு அதிகாரிகளிடம் இருந்து பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கு வாய்மொழியாக வந்ததாக கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை பெட்ரோல் நிலையங்களில் வைக்குமாறு உத்தரவிடுகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களுக்கு சப்ளை நிறுத்தப்படும் என்ற மறைமுக அச்சுறுத்தலும் விடுக்கப்படுகிறது” என்று இதுகுறித்து இந்திய பெட்ரோல் டீலர்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.எஸ்.கோகி தெரிவித்துள்ளார். ஆனால் பெட்ரோலிய துறை அதிகாரிகள் இதனை மறுத்துள்ளனர்.

Leave a Reply