பிரதமர் மோடிக்கு இம்ரான்கான் எழுதிய முக்கிய கடிதம்
சமீபத்தில் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற இம்ரான்கான் சமாதான பேச்சுவார்த்தை பேசா வருமாறு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தான் பாகிஸ்தான் பிரதமராக, பதவியேற்றபோது வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதிய இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து இம்ரான் கான் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், இந்தியா-பாகிஸ்தான் இடையே தடைபட்ட அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த மாத இறுதியில் நியூயார்க்கில் நடைபற உள்ள ஐநா பொதுசபை கூட்டத்தின்போது பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷியும், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜும் சந்தித்து பேசவேண்டும் என்று இம்ரான் கான் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஐநா பொதுசபை கூட்டத்தில் இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையிலான சந்திப்புக்கு வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இரு நாடுகளிடையே தடைபட்ட பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
#IndiaPakistanTalks #ImranKhan #M