பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து மு.க.அழகிரி கடிதம்
பாரத பிரதமர் நரேந்திரமோடி நேற்று திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்திற்கு வருகை தந்து உடல்நலம் விசாரித்த நிலையில் கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி பிரதமருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
மு.க.அழகிரி எழுதிய கடிதத்தில், ‘என் பெற்றோரை சந்தித்ததற்கு தனிப்பட்ட முறையில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பிரதமரின் வருகை என்னை நெகிழ்ச்சி அடைய செய்தது.
நீங்கள் எனது தந்தையை பார்க்க வரும் செய்தி எனக்கு தெரியாது என்பதால் என்னால் உங்களை வரவேற்க முடியவில்லை. மேலும் டெல்லியில் வந்து தங்கி ஓய்வு எடுங்கள் என்று நீங்கள் எனது தந்தையிடம் கூறியது அவரது உடல்நிலை முன்னேற்றத்திற்கு உதவும் என்று நினைக்கின்றேன். மேலும் நாட்டு முன்னேற்றத்திற்காக பாடுபடும் உங்களுக்கு பாராட்டுதல்களை தெரிவித்து கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்