பிரதமர் மோடியை திடீரென சந்தித்த ஆளுனர்: நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்குமா?
தமிழகத்தின் புதிய ஆளுனராக சமீபத்தில் பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித் கடந்த 8ஆம் தேதி மரபுப்படை குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவரை சந்தித்தார். ஆனால் இன்று அவர் பிரதமர் மோடியையும் சந்தித்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழல், இந்த சந்திப்புக்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளதாகவும், இந்த சந்திப்பில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம், பெரும்பான்மை வாக்கெடுப்பு உள்ளிட்ட விஷயங்களில் பிரதமரிடம் ஆளுனர் ஆலோசனை செய்ததாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ஆளுனர் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் வரும் 13ஆம் தேதி சென்னை திரும்பும் ஆளுனரின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இருப்பினும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வரும் நவம்பர் 2ஆம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு வாய்ப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.