பிரதமர் மோடி காமெடி பீஸா? அர்ஜெண்டினா ஊடகங்களின் கிண்டலால் பரபரப்பு
பாரத பிரதமர் நரேந்திர மோடியை காமெடி பீஸ் போல சித்தரித்து அர்ஜெண்டினா ஊடகம் ஒன்று கார்ட்டூன் போட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஜி-20 மாநாட்டில் அர்ஜெண்டினா சென்றுள்ள பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரபல ஊடகம் ஒன்று அவரை பிரபல கார்டூன் கதாபாத்திரத்துடன் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ஊடகத்துக்கு உலகெங்கிலும் இருந்து கண்டனம் பெருகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அர்ஜென்டினா நாட்டில் மிக பிரபலமான தொலைக்காட்சி சேனல் ஒன்று ‘சிம்ப்சன்ஸ்’ என்ற காமெடி கார்டூன் தொடரை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த ஒரு கடைக்காரர் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவதுபோல் நைய்யாண்டித்தனமான ஒரு கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது.
அர்ஜென்டினா நாட்டில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்த பிரதமர் மோடியின் விமானம் தரையிறங்கியதும் ‘அபு’ வந்து விட்டார் என்ற அடைமொழியுடன் ‘குரோனிக்கா டி.வி.’ பிளாஷ் செய்தி வெளியிட்டது. இந்த செய்திக்கு இந்தியர்கள் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.