பிரபஞ்ச அழகியாக தென்னாப்பிரிக்காவின் டெமி லீ தேர்வு

பிரபஞ்ச அழகியாக தென்னாப்பிரிக்காவின் டெமி லீ தேர்வு

உலக அழகியாக சமீபத்தில் இந்திய அழகி மனுஷி சில்லார் தேர்வு செய்யப்பட்ட நிலையில் நேற்று நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் தென்னாப்பிரிக்க அழகி டெமி லீ வென்றுள்ளார்

பிரபஞ்ச அழகியாக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த டெமி லீ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 92 அழகிகள் பங்கேற்ற பிரபஞ்ச அழகி போட்டியின் இறுதிச்சுற்று நேற்றிரவு அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில்நடைபெற்றது.

வண்ணமயமான இந்த இறுதிச் சுற்றில் கொலம்பியா நாட்டின் லாரா ((Laura Gonzalez)), ஜமைக்காவின் டேவினா ((Davina Bennett)) மற்றும் தென்ஆப்பிரிக்காவின் டெமி லீ ((Demi-Leigh Nel-Peters)) ஆகியோர் போட்டியிட்டனர்.

இந்த இறுதி சுற்றில் கேள்வி ஒன்றுக்கு புத்திசாலித்தனமான பதில் கூறிய தென்னாப்பிரிக்காவின் டெமி லீ பிரபஞ்ச அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply