பிரபல சமூக வலைத்தளத்தின் 65 மில்லியன் பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யப்பட்டதா? அதிர்ச்சி தகவல்
சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் ஆகியவற்றை அடுத்து உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள இணையதளம் Tumblr. இந்த இணையதளத்தில் இருந்து 65 மில்லியன் பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. இந்த தகவல் உண்மையென்றால் உலகின் மிகப்பெரிய மூன்றாவது இணைய திருட்டு இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Tumblr இணையதளம் இதுவரை எத்தனை பயனாளிகளின் தகவல்கள் திருடப்பட்டது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடவில்லை. ஆனாலும் சமூக இணையதளங்களை கண்காணித்து வரும் தனியார் அமைப்பு ஒன்று 65,469,298 Tumblr இணையதள பயனாளிகளின் இமெயில் மற்றும் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டதாக கூறியுள்ளது.
இதற்கு முன்னர் 164 மில்லியன் LinkedIn பயனாளிகளின் தகவல்களும், 152 மில்லியன் அடோப் பயனாளிகளின் தகவல்களும் திருடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.