பிரபல நடிகர் கிரேஸிமோகன் காலமானார்.
பிரபல நடிகர், நாடக ஆசிரியர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா கிரேஸி மோகன் சற்றுமுன் சென்னையில் காலமானார்.
நடிகர் கிரேஸி மோகன் அவர்களுக்கு சற்றுமுன் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும், உடனடியாக அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவர் மதியம் 2 மணி அளவில் மரணம் அடைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமான கிரேஸி மோகன், அவர் நடித்த அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன், இந்திரன் சந்திரன், மகளிர் மட்டும், சதி லீலாவதி, அவ்வை சண்முகம், போன்ற படங்களுக்கு வசனம் எழுதி சில படங்களில் நடித்தும் உள்ளார். கிரேஸி மோகனின் மறைவு திரையுலகிற்கு மட்டுமின்றி நாடகத்துறைக்கும் பெரும் இழப்பு ஆகும்