திரைப்படங்களில் இருந்து விலகுகிறாரா?
பிரபல நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதன்பின் டிஸ்சார்ஜ் ஆனார் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் திடீரென அவருக்கு நுரையீரல் புற்று நோய் ஏற்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சில மருத்துவ சிகிச்சைக்காக நான் என் வேலையில் இருந்து ஒரு குறுகிய கால ஓய்வு எடுத்துக் கொள்ள போகிறேன் எனது குடும்பத்தினரும் நண்பர்களும் என்னுடன் இருக்கிறார்கள் அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்
நுரையீரல் புற்றுநோய் காரணமாக அவர் நடித்துக் கொண்டிருந்த படங்களில் இருந்து விலகுவதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேஜிஎஃப் இரண்டாம் பாகம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் சந்தேகக் நடித்து வருவதால் தற்போது அவர் சிகிச்சைக்கு அமெரிக்காவிற்கு செல்ல இருப்பதால் அவரை அவர் நடித்து வரும் கேரக்டருக்கு மாற்று நடிகர் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது