பிரபாகரனுடன் போட்டோ எடுத்தவர்கள் எல்லாம் போராளிகளா? கருணாஸ்

பிரபாகரனுடன் போட்டோ எடுத்தவர்கள் எல்லாம் போராளிகளா? கருணாஸ்

பிரபாகரனுடன் ஒரே ஒரு புகைப்படம் எடுத்ததை வைத்து கொண்டுதான் நாம் தமிழர் கட்சியின் சீமான் இன்று வரை தானும் ஒரு விடுதலைப்புலி என்றும் தானும் போர் செய்ததாகவும் ஆயுதங்களை பயன்படுத்தியதாகவும் ஒவ்வொரு மேடையிலும் கூறி வருவதாக மதிமுகவினர் உள்பட பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபாகரனுடன் புகைப்படம் எடுத்ததை வைத்துக்கொண்டு அனைத்தையும் முன்னின்று நடத்தியதாக சிலர் கூறுகின்றனர் என்றும், இலங்கைக்கு சம்மந்தமே இல்லாதவர்கள் இதுபோன்ற கருத்துகளை கூறுவது ஆச்சரியமாக உள்ளது என்றும் நடிகரும் திருவாடனை தொகுதி எம்.எல்.வுமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம் என்றும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply